• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு..!!

Byகாயத்ரி

Oct 1, 2022

இந்தியா முழுவதும் பெட்ரோலிய நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த மாதம் முதலாக வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதமும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.36 குறைந்துள்ளது. இதனால் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.2,009க்கு விற்பனையாகிறது. ஆகஸ்ட் மாதத்தில் வணிக சிலிண்டர் விலை ரூ.2045 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை கடந்த மாதத்தின் விலையிலிருந்து எந்த ஏற்ற இறக்கமும் இன்றி ரூ.1,068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.