• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆம்னி பஸ்களில் புதிய கட்டணம் அறிவிப்பு..

ByA.Tamilselvan

Oct 1, 2022

ஆம்னி பஸ்களில் பண்டிகை காலங்களில் தாறுமாறாக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரடியாக தலையிட்டு ஆம்னி பஸ் உரிமைாளர்கள் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பண்டிகை காலங்களில் கட்டணத்தை திடீரென உயர்த்துவதை தவிர்க்க வேண்டும். நிலையான கட்டணத்தை பொதுமக்கள் பாதிக்காத வகையில் நிர்ணயிக்குமாறு வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்துள்ளனர். 6 வகையாக வசதிகளை பிரித்து கட்டணம் வகைபடுத்தப்பட்டுள்ளது.
ஏ.சி. இல்லாத இருக்கை, ஏ.சி. இல்லாத படுக்கை வசதி, ஏ.சி.யுடன் இருக்கை வசதி, ஏ.சி.யுடன் படுக்கை வசதி மற்றும் வால்வோ பஸ் இருக்கை, வால்வோ பஸ் படுக்கை என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம் குறைத்து இருப்பதாக தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல், பொருளாளர் மாறன் ஆகியோர் தெரிவித்தனர்.