• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் (TAMJU) சந்திப்பு..

Byகாயத்ரி

Sep 30, 2022

தமிழ்நாடு அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் (TAMJU) சந்திப்பு..

தமிழ்நாடு அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் (Tamilnadu All media journalist union) கூகுள் சந்திப்பு கடந்த செப்.28 ஆம் தேதி காலை 11 மணிக்கு நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின்(TAMJU) டிஜிட்டல் பத்திரிகையாளர் பிரிவு, தெற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் T.பாக்கியராஜ்(State organiser, South), வடக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் E. ஸ்ரீநிவாசன்(State organiser, North), மேற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் P.D. செல்வராஜூ(State organiser, West), IFJ(International Federation of Journalists) துணைத் தலைவர் செல்வி சபினா இந்திரஜித், IFJ தேசிய தலைவர் திரு. கீதார்தா பதாக், தமிழ்நாடு அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் B.சிவகுமார், தமிழக பத்திரிகையாளர்கள், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அதில் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் சங்கத்தை பலப்படுத்துதல் சம்மந்தமாகவும், சங்கத்தின் நிகழ்வுகள், செயல்பாடுகள் சம்மந்தமாகவும், சங்கத்தில் பெண் பத்திரிகையாளர்களை ஊக்கவிப்பது தொடர்பாகவும், பெண் பத்திரிகையாளர்களை சங்க நிகழ்வுகளில் ஈடுபடுத்துதல், டிஜிட்டல் பத்திரிகையாளர்களை சங்கத்திற்குள் கொண்டு வந்து உறுப்பினர்களாக மாற்றி, சரியான பாதையில் அவர்களை கொண்டு செல்வது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றது.