• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இங்கிலாந்து மன்னரின் அதிகாரபூர்வ மோனோகிராம் வெளியீடு…

Byகாயத்ரி

Sep 28, 2022

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பிறகு மன்னராக பொறுப்பேற்றுள்ள மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் அதிகாரபூர்வ மோனோகிராம் வெளியிடப்பட்டுள்ளது. காலேஜ் ஆஃப் ஆர்ம்ஸ் மன்னருக்கான மோனோகிராமை வடிவமைத்துள்ளது.அவரது ஆரம்ப எழுத்தான “C” , லத்தீன் மொழியில் மன்னர் என்று பொருள்படும் Rex என்ற எழுத்தில் “R” மற்றும் இரண்டுக்கும் நடுவில் III இடம்பெறுகிறது. “C” மற்றும் “R” எழுத்துக்களுக்கு மேலே கிரீடம் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. உருவாக்கப்பட்ட பல வடிவங்களில் சார்லஸ், இந்த வடிவத்தை தேர்ந்தெடுத்தார். விரைவில் அரசு ஆவணங்கள் மற்றும் தபால் பெட்டிகளில் இந்த மோனோகிராம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.