• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

6 வகுப்பு பாடத்தில் வர்ணாசிரமம்!!! மநீம கண்டனம்

ByA.Tamilselvan

Sep 26, 2022

சிபிஎஸ்இ 6ம் வகுப்பு பாடத்தில் சாதி ,பேதம் ஏற்படுத்தும் வகையில் பாடம் கற்பிப்பதற்கு மநீம தனது கடும் கண்டணத்தை தெரிவித்துள்ளது.
பேதமற்ற சமூதாயம் அவசியம் என்று கற்பிக்க வேண்டிய பள்ளியில் மனிதர்களிடம் சாதி,பேதம் ஏற்படுத்தும் வகையில் பாடம் கற்பிப்பது கடும் கண்டத்துக்குரியது என மநீம தெரிவித்துள்ளது. இதுபற்றி ட்விட்டர் பதிவில் “சிபஎஸ்இ பாடத்திட்டத்தில் 6ம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் சாதி ,பேதத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் வர்ணாசிரமம் தொடர்பான பாடம் இடம் பெற்றுள்ளது பெரிதும் அதிர்ச்சியளிக்கிறது. உடனடியாக அந்தப் பாடத்தை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.