• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ராகுல் ட்ராவிட்டை பின்னுக்கு தள்ளிய கோலி… புதிய மைகல்லை எட்டிய வீராட்..

Byகாயத்ரி

Sep 26, 2022

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கோலி நேற்றைய போட்டியில் ஒரு முக்கியமான மைல்கல்லை தொட்டுள்ளார். நேற்றைய போட்டியில் சிறப்பாக இறுதிவரை ஆடி 48 பந்துகளில் 63 ரன்களை சேர்த்தார் கோலி. இந்த ரன்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமானக் காரணமாக அமைந்தது. இந்த அற்புதமான இன்னிங்ஸ் மூலமாக கோலி ஒரு முக்கியமான மைலகல்லை தொட்டுள்ளார்.
இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் தற்போது ராகுல் ட்ராவிட்டை முந்தியுள்ளார் கோலி. கோலிக்கு முன் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார்.

• சச்சின் டெண்டுல்கர் – 34,357 ரன்கள் – 664 போட்டிகள்
• விராட் கோலி – 24,078 ரன்கள் – 471 போட்டிகள்
• ராகுல் ட்ராவிட் – 24,064 ரன்கள் – 404 போட்டிகள்
• கங்குலி – 18,433 ரன்கள் – 421 போட்டிகள்
• எம்.எஸ்.தோனி – 17,092 ரன்கள் – 535 போட்டிகள்