• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

ByA.Tamilselvan

Sep 25, 2022

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்” தேசத்துக்கு எதிராக செயல்படும் சக்திகளை கட்டுக்குள் கொண்டு வர எங்களுக்கு அரைமணி நேரம் போதும். ஆனால் சட்டத்தை கையில் எடுக்க எங்களுக்கு விரும்பம் கிடையாது. இது போன்ற சம்பவங்களை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று எச்சரிக்கை விடுக்கிறோம் என்று கூறியுள்ளார்.