• Fri. Apr 19th, 2024

கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை

ByA.Tamilselvan

Sep 25, 2022

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதையடுத்து, கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சம்பவங்களால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தின் பெட்ரோல் பங்குகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர். அதன்படி கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வாறு கேன்களில் பெட்ரோல் வாங்க வரும் நபர்களின் விவரங்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டிலில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது எனும் அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *