• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அமித்ஷாவை கண்டித்து ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- வைகோ

ByA.Tamilselvan

Sep 25, 2022

அமித்ஷாவின் இந்தி எதிர்ப்பு பேச்சுக்கு எதிராக மதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ..மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட, இந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம், மீண்டும் அடுத்த மாதம் 6-ந் தேதி மாலை நடைபெற உள்ளது. அமித்ஷாவின் இந்தி வெறி பேச்சுக்கு-போக்குக்கு கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வருகிற 6-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் உணர்வாளர்களையும், கழகத்தினரையும் அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.