• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காந்தி குடும்பத்தின் பினாமியாக புதிய காங்கிரஸ் தலைவர் இருப்பார்- பாஜக

ByA.Tamilselvan

Sep 23, 2022

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் காந்தி குடும்பத்தின் பினாமியாக இருப்பார் என்றும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போல அவர்களால் ரிமோட் கண்ட்ரோல் செய்யப்படுவார் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.
பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, முன்னாள் தலைவராக வருவதால் அவருக்கு என்ன திறன் இருக்க முடியும்? காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்ய வேண்டாமா? காந்தி குடும்பத்திடம் ரிமோட் கண்ட்ரோல் இருக்கும்பட்சத்தில் இந்த போலித் தேர்தல் எதற்கு? காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம், அடுத்த தலைவராக யார் வந்தாலும், ராகுல் காந்திக்கு கட்சியில் முக்கிய இடம் கிடைக்கும் என சமீபத்தில் கூறியதாக பூனவல்லா குறிப்பிட்டார். மேலும், காங்கிரஸின் அடுத்த தலைவர் காந்தி குடும்பத்தின் பினாமியாக இருப்பார் என்பதற்கு இது ஒரு சான்றாகும். மேலும், மன்மோகன் சிங்கை சோனியா காந்தி ரிமோட் மூலம் கட்டுப்படுத்தியதுபோல் புதிய காங்கிரஸ் தலைவரையும் கட்டுப்படுத்துவார். இந்த அறிக்கைகள், விரைவில் நடைபெறவுள்ள வாக்குப்பதிவு வெறும் கண்துடைப்புக்காக என்பதைத் தெளிவுபடுத்துகிறது” என்று பூனாவல்லா கூறினார்.