• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

கர்நாடகா முதல்வரை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள வைரல் போஸ்டர்

ByA.Tamilselvan

Sep 21, 2022

கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மையை விமர்சித்து ஒட்டப்பட்டள்ள போஸ்டர் இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் திட்டங்களை அமல்படுத்துவதற்கு அம்மாநில அரசு 40% கமிஷன் பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இதை விமர்சிக்கும் வகையில் paytm என்ற போஸ்டர்களை காங்கிரஸ் கட்சியினர் ஒட்டி வருகின்றனர். அதில் QRcode போன்ற வடிவமைப்பில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையின் புகைப்படம் இடம்பெற்று,40% கமிஷன் பெறப்படும் என எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த QRcode ஐ ஸ்கேன் செய்தால் மக்கள் புகார் அளிக்கும் வகையில் இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.