• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உதயநிதிக்கு அரசு வழக்கறிஞர் வாதிடக்கூடாது – நீதிமன்றம்

ByA.Tamilselvan

Sep 16, 2022

உதயநிதி ஸ்டாலினின் வழக்குக்கு அரசு வழக்கறிஞர் ஆஜராகக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் தவறான கணக்கு விவரங்களை தாக்கல் செய்ததாக அவரை எதிர்த்து போட்டியிட்டவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் வாதாடுவதற்காக உதயநிதி சார்பில் அரசு வழக்கறிஞர் ஆஜரானார். இதற்கு எதிர் மனுதாரர் “உதயநிதிஸ்டாலின் என்ற தனி மனிதருக்கு எதிரான வழக்கு இது .அரசு வழக்கறிஞர் ஆஜராகக்கூடாது ” என்று வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதி அரசு வழக்கறிஞர் ஆஜராக கூடாது என்று உத்தரவிட்டார்.