• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சவுக்கு சங்கரை நான் ஆதரிக்கிறேன்… சினிமா விமர்சகர் பளிச்…

Byகாயத்ரி

Sep 16, 2022

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று உத்தரவிட்டது. கடந்த ஜூலை 22-ந் தேதி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நீதித்துறை ஊழல் நிறைந்துள்ளதாக பேசியதின் எதிரொலி தான் கைது செய்யபட்டார்.

சவுக்கு சங்கர் பேசியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளுசட்டை மாறன் சவுக்கு சங்கருக்கு ஆதரவு தெரிவிப்பதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சவுக்கு சங்கர் சிங்கம் மாதிரி வாழ்பவர் என்றும், எதையும் ஆராய்ந்து பேசுபவர், உண்மை பக்கம் நிற்பவர் என்று புகழ்ந்து பேசியுள்ளார் மாறன். அவரின் கைது நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். இது போக சவுக்கு சங்கரின் பக்கம் நிற்பதாகவும், அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அந்த வீடியோவில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இந்த, பதிவை பார்த்த பலரும் பிரபலமாகிவிட்டால் கருத்து தெரிவிக்கலாமோ, சினிமாவை மட்டும் விமர்சனம் செய் என்று கமென்ட்ஸ் செய்து வருகின்றனர். ப்ளு சட்டை மாறனுக்கு சர்ச்சை ஒன்றும் புதிதல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே..!!