• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

ஆவின் இனிப்பு வகைகள் விலை உயர்வு இன்று முதல் அமல்.

Byகாயத்ரி

Sep 16, 2022

ஆவின் நிறுவனத்தில் இனிப்பு வகைகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் இந்த இனிப்பு வகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

ஆவின் இனிப்பு வகைகள் இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது. ஆவின் நிலையத்தில் விற்பனை செய்யப்படும் குலாப்ஜாமூன், ரசகுல்லா, பால் கோவா உள்ளிட்ட இனிப்பு பொருட்கள் 20 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விலை உயர்வு என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆவின் பால் பண்ணையில் பால்கோவா, மைசூர்பாக் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை அடுத்து ஆவின் பால் பண்ணையில் இனிப்பு வகைகளின் விற்பனை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது விலையை உயர்த்தியது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.