• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தேனியில் திமுக எம்.பி. ஆ. ராஜா உருவ பொம்மை எரிக்க முயற்சி, பதட்டம் .

தேனி நேரு சிலை முன்பாக சிவசேனா கட்சி சார்பாக திமுகவைச் சேர்ந்த 
ஆ.ராஜா உருவ பொம்மையை எரிக்க முயன்ற நிலையில்  போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு .

     தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை முன்பாக சிவசேனா கட்சி மாநில செயலாளர் குரு ஐயப்பன் தலைமையில நாமக்கலில் திமுகவின் சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட நீலகிரி எம்.பி. ஆ.ராசா இந்துக்களின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில்  பேசி வரும் நிலையில் அவரை கண்டித்து தேனி பழைய பேருந்து நிலையம் முன்பாக தேனி மதுரை சாலையில் ஊர்வலமாக வந்து நேரு சிலை முன்பாக ஆ. ராஜாவின் உருவ பொம்மையை எரிக்க முற்பட்ட நிலையில் அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி  உருவபொம்மையை கைப்பற்றினர் பின்னர் நேரு சிலை முன்பாக ஆ.ராஜாவை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 இதனால் தேனி மதுரை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.