தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், திமுக துணை பொது செயலாளரும்,நீலகிரி தொகுதி எம்.பி யுமான ஆ. ராசா இந்துக்களை அவதூறாக பேசியதை கண்டித்தும், அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். பாஜக மண்டல் தலைவர் ராஜா அறிவுறுத்தலின்படி, மண்டல் பொதுச் செயலாளர் நந்தகோபால், மண்டல் துணைத் தலைவர்கள் எஸ் .எம்.ராஜா ,விமல் குமார், பரமன் , மாவட்ட விளையாட்டு பிரிவு துணைத் தலைவர் திருமால் ராஜ், மாவட்ட விவசாய பிரிவு துணைத் தலைவர் செல்வராஜ் ,ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜீவ் காந்தி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆ. ராசாவை கண்டித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.