• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அதிமுக வை காப்பாற்ற இபிஎஸ்க்கு பதில் புதிய தலைவர் – பண்ருட்டி ராமசந்திரன்

ByA.Tamilselvan

Sep 15, 2022

அதிமுகவை காப்பாற்ற இபிஎஸ்க்கு பதில் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என பண்ருட்டி ராமசந்திரன் பேச்சு
பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அமைப்பு செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் இபிஎஸ் ஐ வைத்து அதிமுகவை காப்பாற்ற முடியாது அவரிடம் தாய்மை உள்ளம் இல்லை, தலைமையிலிருந்து இபிஎஸ் ஐ மாற்றுவது தான் அதிமுகவை காப்பாற்றுவதற்கான ஒரே வழி என்று நேற்றுவரை இபிஎஸ் ஆதரவாளராக இருந்த மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளார். அதிமுக முக்கியமான காலகட்டத்தில் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இபிஎஸ் தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவை தடுக்க முடியாது எனவே அவரை நீக்கி புதியவரை தலைவராக தேர்தெடுக்கவேண்டும் என்றார்.