பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதியான இன்று தேசிய பொறியாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்.15ம் தேதி தேசிய பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் முட்டனஹள்ளி கிராமத்தில் 1860 ம் ஆண்டு பிறந்த பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாளை தான் பொறியாளர் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்திய பொறியியலின் தந்தை என்றழைக்கப்படும் இவருக்கு 1955ம் ஆண்டு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. காவிரி ஆற்றின் குறுக்கே இவரால் கட்டப்பட்ட கிருஷ்ணராஜா சாகர் அணைதான் அப்போது ஆசியாவின் மிகப்பெரிய அணையாக இருந்தது.
இன்று தேசிய பொறியாளர் தினம்
