• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தி வழிபாடு அவசியம்..!!

Byகாயத்ரி

Sep 13, 2022

பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். இந்த சதுர்த்தியானது விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள். எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம்.

சங்கடஹர சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள விநாயகர் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்தல் நல்லது. பின்னர் தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும். விநாயகருக்கு உகந்த விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி மந்திரங்கள், கணபதி 108 போற்றி பாடல் போன்ற மந்திரங்களைப் படிக்கவும்.கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும், பச்சரிசியை ஊறவைத்து, அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, பசுவுக்குக் கொடுக்க வேண்டும். கணபதியோடு பசு வழிபாடு செய்வது கூடுதல் நன்மை தரும். இந்த நாளில் விநாயகப் பெருமானை வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை இல்லா தம்பதிகளும் குழந்தை பாக்கியம் பெற சதுர்த்தி விரதத்தை கடைபிடிக்கின்றனர் என்பதும் ஐதீகம்.

உங்கள் சங்கடங்கள் தீர முதல் கடவுளான விநாயகனை இந்த நன்நாளில் வணங்குங்கள்.