• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொன்னியின் செல்வன் நந்தினி கதாபாத்திரத்திற்கு டப்பிங் இவங்களா..??

Byகாயத்ரி

Sep 10, 2022

சமீபத்தில் பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அவர்களோடு சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். அவருக்கு பின்னணி குரல் கொடுக்க தமிழில் நடிகையுமான பின்னணிக் குரல் கலைஞருமான தீபா வெங்கட் ஒப்பந்தமாகியுள்ளார். இதை அவரே தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இவர் நயன்தாராவுக்கு தொடர்ச்சியாக பல படங்களில் டப்பிங் பேசி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இவர் குரலுக்கே பல ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.