• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மோடியை எதிர்த்து நிற்க ஆள் வேண்டும் அதற்கு ராகுல் ஆள் இல்லை சீமான் பளிச் பேட்டி

Byகுமார்

Sep 9, 2022

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள விக்டோரியா எட்வர்டு மன்றம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தனி நபரால் முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும், பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்த மிகப்பெரிய நூலகம், அருங்காட்சியகம் போன்றவைகள் முறையான பராமரிப்பின்றி செயல்பாடு இன்றி மன்றத்திற்கு சொந்தமான வணிக வளாகத்தின் வாடகை மொத்தத்தையும் பொய்கணக்கு எழுதி முறைகேடு நடைபெறுவதாக கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடி கள ஆய்வு மேற்கொள்ள விக்டோரியா எட்வர்டு மன்த்திற்கு வருகை தந்தார்.

தொடர்ந்த விக்டோரியா எட்வர்டு மன்றம் வாயிலில் பூட்டு போட்டு 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு காவல்துறையினர் சீமானை உள்ளே செல்ல விடாமல் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சீமான் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

முதல்வர் நிமிடத்திற்கு நிமிடம் பாடுபடுகிறேன் எனக்கூறுகிறார். அது அவர் சொல்வது தான்.

முதல்வர் என்னவாக பாடுபடுகிறார் என்பதில் தான் உள்ளது.

முதல்வர் பாடுபடுபவராக இருந்தால் அதனை எங்களை போன்ற பொதுவானவர்கள், மக்கள் சொல்ல வேண்டும். நம் முதல்வர் உழைக்கிறார், ஒய்வின்றி பாடுபடுகிறார் என மக்கள் சொல்ல வேண்டும்.

அவரே மேடைக்கு மேடை நான் உழைக்கிறேன் பாடுபடுகிறேன் என சொல்லக்கூடாது. நாம் சொல்ல வேண்டும்.

80சதவீத பிரச்சனைகளை, திட்டங்களை செய்ததாக முதல்வர் கூறுகிறார். பிறகு ஒரு கூட்டத்தில்70 சதவீத பிரச்சனைகளை சரி செய்து விட்டோம் என சொல்லுகிறார். 8 பிரச்சனைகளையாவது தீர்த்தார்களா என்பது தான் கேள்வி.

எதற்கு 1000 வழங்கும் திட்டம்? 1000 ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக கொடுக்கும் கல்வியை தரமாக கொடுங்கள்.

எங்களுக்கு படிக்க காசு இல்லை, அப்பா அம்மா வறுமையில் உள்ளார்கள் என மாணவிகளை கையேந்த வைப்பது புதுமை அல்ல.

பெண்களுக்கு கல்வியை கொடுத்து வளமாக்க வேண்டும்.

பெண்கள் கல்வியை கற்று அதற்கேற்ற வேலையை பெற்று சம்பாதிக்க வேண்டும், அண்ணன், தம்பி, கணவன் யாரையும் சார்ந்து இல்லாமல் தன்காலில் நின்று உழைக்கும், வாழும் நிலையை உருவாக்குவதே புதுமை.

குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டத்திற்கோ நிதி வலிமை, நிதி ஆதாரம் இல்லை என கூறினார்கள்.

ஆனால் கல்லூரி மாணவிகளுக்கு 1000ரூபாய் கொடுக்க 696 கோடி எப்படி வந்தது.

யார் கேட்டது 1000ரூபாய், கல்வியின் தரத்தை தரமாக மாற்றி கொடுங்கள்.

1000 ரூபாயை வைத்து ஒரு சிலிண்டர் வாங்க முடியுமா.

1000ரூபாயை வைத்து எந்தக்கல்லூரியில் சேர முடியாது.

இது ஆட்சி கிடையாது. ஷாருக்கான் சல்மான்கான், நடிகர் நடிகைகளை தான் மாடல் என்பார்கள்.

திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு பல ஆயிரம் கோடியில் விளம்பரம் மட்டும் தான் நடக்கிறது.

இந்தியாவை 50 ஆண்டுகள் ஆட்சி செய்து மாற்றத்தை கொண்டு வராத ராகுல்காந்தி நடை பயணம் மேற்கொண்டு மாற்றம் கொண்டு வருவாரா?

என்ன மாற்றம் வரப்போகிறது. காலையும், மாலையும் நடப்பதால் அவருக்கு வேண்டுமானால் மாற்றம் வரலாம்.

மோடியை எதிர்க்க ஆள் வேண்டும் அதற்கு ராகுல் ஆள் இல்லை.

பிரதமராக தமிழர் வருவாரா?

நாங்கள் தனித்து போட்டியிடுவோம். அந்தப்போட்டியில் நாங்களும் பங்கேற்கிறோம்.