• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சீக்கிரம் தமிழ் மொழியை கற்றுக்கொள்வேன்.. ராகுல் காந்தி கலகல

Byகாயத்ரி

Sep 9, 2022

காங்கிரஸ் எம்.பியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தொடங்கியுள்ள பாரத ஒற்றுமை யாத்திரை இன்று 3ஆம் நாளாக தொடர்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த யாத்திரையில் திரளான காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

மேலும், செய்தியாளர்களுக்கும் பேட்டியளித்து அவர் பேசுகையில், ‘தமிழ் மொழியை நிச்சயம் நான் விரைவாக கற்று கொள்ள வேண்டும். தமிழ் மொழி அழகான மொழி. ஆனால், அதனை கற்று கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் என நினைக்கிறேன் ‘ என பேசியிருந்தார். ‘ வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு பாஜக அரசு செயல்படுகிறது.’ எனவும் தனது விமர்சனத்தை முன்வைத்தார் ராகுல் காந்தி. இன்று மற்றும் நாளை கன்னியாகுமரியை கடந்து , வரும் 11ஆம் தேதி முதல் கேரளாவில் தனது பாரத ஒற்றுமை யாத்திரையை தொடர்வார் ராகுல் காந்தி என திட்டமிடப்பட்டுள்ளது.