• Tue. Apr 30th, 2024

யூடியூபிலிருந்து கொரோனா தடுப்பூசிக்கு எதிரான வீடியோக்கள் -மொத்தமாக நீக்கம்

Byமதி

Sep 30, 2021

உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. தடுப்பூசி போடாதது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தடுப்பூசி பற்றிய கட்டுக்கதைகளை மக்கள் நம்பவுது முக்கிய காரணம் ஆகும். கூகுளில் ஏராளமான பொய்யான தகவல்கள் கொரோனா தடுப்பூசிகள் குறித்து கொட்டிக்கிடக்கின்றன.குறிப்பாக யூடியூபில் தடுப்பூசி குறித்து பயமுறுத்தும் வண்ணம் பல்வேறு மொழிகளில் வீடியோக்கள் உள்ளன.

இதையடுத்து சமூக வலைதளங்களில் கொரோனா நோய் குறித்த தவறான தகவலைத் தடுக்கும் முயற்சியாக , கொரோனா தடுப்பூசிகள் ஆபத்தானவை என்று தவறாகக் கூறும் வீடியோக்களை அகற்றப்போவதாக யூடியூப் அறிவித்துள்ளது.

ஏற்கனவே கோவிட் -19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று காட்டப்படும் தவறான தகவல்கள் உட்பட, கொரோனா வைரஸ் சிகிச்சையில் தவறான கட்டுக்கதைகளை பரப்பும் பதிவுகளை வெளியிட வீடியோ பகிர்வு நிறுவனமான யூடியூப் ஏற்கனவே தடை செய்துள்ளது.

ஆனால் யூடியூப் தளம் மருத்துவ கோட்பாடுகள் குறித்து தவறான தகவல்கள் பரவுவதை கண்டு கவலை அடைந்துள்ளது. இது தொடர்பாக யூடியூப் வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பற்றிய தவறான கூற்றுகள் பொதுவாக தடுப்பூசிகள் பற்றிய தவறான தகவல்களுக்கு பரவுவதை நாங்கள் தொடர்ந்து பார்த்தோம். நாங்கள் இப்போது கோவிட் -19 உடன் ஆரம்பித்த வேலையை மற்ற தடுப்பூசிகளுக்கு விரிவுபடுத்துவதற்காக ட முன்னெப்போதையும் விட முக்கியமான ஒரு கட்டத்தில் இருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *