• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ராகுல்காந்தியின் பாதயாத்திரையை தொடங்கி வைத்த ஸ்டாலின்… வீடியோ

ByA.Tamilselvan

Sep 7, 2022

ராகுல்காந்தியின் பாதயாத்திரை பயணத்தை முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரியில் தேசிய கொடியை வழங்கி தொடங்கி வைத்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்ரா”(பாரதமே ஒன்றிணைவோம் ) நடைபயணத்தை கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ராகுல்காந்தி 3570கிமீ தூரத்தை தனது நடைபயணம் மூலம் மேற்கொள்கிறார்.தமிழகம்,கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட 12 மாநிலங்கள் , 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்நிலையில் ராகுல்காந்தியிடம் தேசியகொடியை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இந்த பாதயாத்திரையில் தமிழகத்தை சேர்ந்த 100 பேர் பங்கேற்றுள்ளனர்.