• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லோகி ராஜன் தலைமை தாங்கினார் .துணைத்தலைவர் வரதராஜன் மற்றும் ஆணையாளர்கள் ரவிச்சந்திரன், மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 19 வார்டுகளை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .கூட்டத்தில் வரவு செலவுகள் வாசிக்கப்பட்டு 35 பொருட்களின் மேல் விவாதம் மற்றும் ஒப்புதல் வழங்கப்பட்டது .

அதன் அடிப்படையில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 19 வார்டு கவுன்சிலர்களின் பகுதிகளில் பேவர் பிளாக் பதித்தல், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் , குடிநீருக்கான அடிப்படை ஆதாரங்களை செய்தல், தெருவிளக்கு, மயான சாலை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக இரண்டு கோடி நிதி பகிர்ந்து வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது . கவுன்சிலர் ஒத்துழைப்பு வழங்கியதால் இந்த பணிகளை விரைவில் ஆரம்பித்து முடிக்க ஒன்றிய குழு  தலைவர் கேட்டுக் கொண்டார்.