• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை..! நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு.., தமிழக அரசு அறிவிப்பு.

கொரோனா பெரும் தொற்று நம் நாட்டை மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி எடுத்து, ஆட்டிப் படைத்து விட்டது. தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் அனைவரும் சந்தோசத்தோடு மகிழ்ச்சி அடைந்து வருகின்றோம்.

முதற்கட்டமாக தமிழக அரசு கல்லூரிகளை திறந்துவிட்டது, அடுத்தபடியாக 9 முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பள்ளி மாணவ மாணவிகளை பக்குவமாக கவனமாக பள்ளிக்கு வரும்படி அறிவுறுத்தி அறிவித்தது. தமிழக அரசின் அறிவுரையின்படி பெற்றோர்களும், பள்ளி மாணவ மாணவிகளும் நோயின் தாக்கத்தை மனதில் நினைத்துக்கொண்டு,இதில் மாணவ, மாணவிகள் கவனமாக சமூக இடைவெளியுடன் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று கொண்டு சந்தோஷப்பட்டு படித்து வருகின்றனர்.

எப்போதான் இந்த சுட்டி குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் ஓபன்(திறப்பார்கள்) பண்ணு வாங்களோ? என்ற ஏக்கம் அனைத்து (பெற்றோர்கள் சிறார்களுக்கும்) மனதில் கேள்விக்குறியாக இருந்த நிலையில், தற்போது தமிழக அரசு அதிரடியாக நீண்ட ஆலோசனைக்கு பின்பு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நவம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்கலாம் என்று தற்போது அறிவித்திருக்கின்றது.