• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி

ByA.Tamilselvan

Sep 2, 2022

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.