கியூப புரட்சியாளர் சே குவேராவின் மகன் மாரடைப்ப காரணமாக உயிரிழந்தார்.புரட்சியாளர் சேகுவேராவின் மகனும், அவரது பெயரில் அமைக்கப்பட்டிருந்த மையத்தின் இயக்குநர்களில் ஒருவருமான காமிலோ குவேரா தனது வெனிசுலா பயணத்தின்போது திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் 60 வயதை நிறைவு செய்திருந்தார். சேகுவேராவுக்கும், அலெய்டா மார்ச்சுக்கும் பிறந்த நான்கு குழந்தைகளில் காமிலோ மூன்றாவதாகப் பிறந்தவராவார். . காமிலோவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ள கியூபாவின் ஜனாதிபதி மிகு வேல் டியாஸ் கானெல், “மனதில் ஆழமான வலியுடன், சேயின் புதல்வரும், அவருடைய கொள்கைகளை முன்னிறுத்தியவருமான காமிலோ குவேராவை நாங்கள் வழியனுப்பு கிறோம்” என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.







; ?>)
; ?>)
; ?>)