• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

பா.ஜ.க.வில் ரவுடிகள் ? அண்ணாமலை விளக்கம்…

ByA.Tamilselvan

Aug 31, 2022

பாஜகவில் ரவுடிகள் இணைகிறார்கள் என்ற விமர்சனத்திற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
ரவுடிகள், சமூகவிரோதிகள் பாஜகவில் இணைகிறார்கள் என்ற விமர்சனத்திற்கு அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “அரசியல் லாபத்துக்காகவும், ஆளுங்கட்சியில் சேர்ந்தால் போலீஸ் கைது செய்யமாட்டார்கள் என்று வருபவர்களுக்கும் இது புகலிடம் அல்ல. சில இடங்களில் தவறுகள் நடக்கின்றன. அந்த மாவட்டத் தலைவர்களை நானே கண்டிக்கிறேன். புதிதாக வருபவர்களின் பின்னணியைத் தெரிந்து கொண்டு இணைத்து வருகிறோம் என்று கூறினார்.