• Tue. May 26th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

பிரயாணி வேணுமா..?? 50 பைசா போதும்…

Byகாயத்ரி

Aug 27, 2022

கரூரில் தனியார் உணவகத்தில், 50 பைசாவுக்கு பிரியாணி தருவதாக அறிவித்ததால் அந்த கடையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கரூர் காந்தி கிராமம் அருகே தனியார் உணவகம் ஒன்று வருகிறது. இந்த உணவகம் தொடங்கப்பட்டு ஓராண்டை நிறைவடைந்துள்ளதையடுத்து, 50 பைசாவுடன் கடைக்கு வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த சலுகையை அறிந்த மக்கள் பலர் 50 பைசாவுடன் கடைக்கு வந்துள்ளனர். இந்த சலுகையால் அங்கு கூட்டம் அதிகரித்தது. இதனால், அந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, போக்குவரத்து நெரிசலை காவல்துறையினர் சரி செய்தனர். அதோடு இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடத்தும் போது காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கடை உரிமையாளருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.