• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

சருமம் பொலிவாக ரோஜா பேஸ் பேக்:

Byவிஷா

Aug 27, 2022

சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்க, ஒரு பவுலில் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தமாக கழுவி, அதனை மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மைபோல் அரைக்கவும். பின்பு அந்த பேஸ்ட்டை சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பால், சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின்பு 10 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.

சூரிய கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்க, ஒரு சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் அரைத்த ரோஸ் இதழ்களை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து, இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

தேவையானவை:
ரோஜா – 3
தயிர்- கால் கப்
ஆலிவ் ஆயில்- 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

செய்முறை:

ரோஜா இதழ்களை தயிருடன் கலந்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதனுடன் ஆலிவ் ஆயிலைக் கலந்து நன்கு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பயன்படுத்தினால் ரோஜாப்பூ ஃபேஸ்பேக் தயார்.