• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை

Byகாயத்ரி

Aug 26, 2022

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 11ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற ஒரு படகையும், அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து திரிகோணமலை சிறையில் அடைத்திருந்தனர்.
இந் நிலையில், உடனடியாக அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் இலங்கை வசம் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 94 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தி இருந்தார். இன்று திரிகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.