• Fri. Mar 6th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஜம்மு காஷ்மீரில் 4 நாட்களில் 11 முறை நிலநடுக்கம்..,

ByA.Tamilselvan

Aug 26, 2022

ஜம்மு காஷ்மீரில் இன்று இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை மகாராஷ்டிராவின் கோலாப்பூர் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதே போல இந்தியாவின் வட பகுதியான ஜம்மு காஷ்மீரில் ரெசி மாவட்டத்தில் உள்ள கட்ர பெல்ட்டில் இன்று அதிகாலை 3.28 மணிக்கு 3.4 என்கிற ரிக்டர் அளவிலும் மற்றொன்று டோடா மாவட்டத்தில் அதிகாலை 4.07 மணிக்கு 2.8 ரிக்டர் அளவில் 40 நிமிட இடைவெளியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் காயமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. காட்ரா, டோடா, உடம்பூர் மற்றும் கிஷ்டவார் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களில் 11 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.