• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரி ஆசிரியருக்கு “தேசிய நல்லாசிரியர் விருது“…

Byகாயத்ரி

Aug 26, 2022

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர் அரவிந்தராஜாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வியல் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் மூலம் ஆண்டுதோறும் “தேசிய நல்லாசிரியர் விருது“ வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2022-ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் உள்ள அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர் அரவிந்தராஜாவுக்கு சிறந்த நல்லாசிரியருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் அரவிந்தராஜாவுக்கு பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.