• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருப்பதியில் பலத்த மழை- பக்தர்கள் அவதி

ByA.Tamilselvan

Aug 26, 2022

ஆந்திரமாநிலம் திருப்பதியில் பலத்த மழை பெய்து வருவதால் குளிர் நிலவுகிறது எனவே பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதி, சித்தூர், காளஹஸ்தி, ரேனிகுண்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. . திருப்பதியில் தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். வைகுந்தம் காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியதால் நீண்ட தூரம் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். மழையில் நனைந்தபடி பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இரவு நேரங்களில் கடும் குளிர் வீசுவதால் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர்.