• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மீண்டும் தலைதூக்கும் வேளாண் சட்ட பிரச்சனை.. போராட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள்!

Byகாயத்ரி

Aug 22, 2022

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது. பின்னர் விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று சில வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்வது குறித்த வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் உள்ளது. பிரதமர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் பரபரப்பு எழுந்துள்ள நிலையில் போராட்டக்காரர்கள் டெல்லிக்குள் நுழையாமல் இருக்க டெல்லி எல்லையில் சிமெண்ட் தடுப்பு சுவர்கள் போன்றவை அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.