• Mon. Jan 20th, 2025

செக் மோசடியில் பிரபல இயக்குநருக்கு சிறை…

Byகாயத்ரி

Aug 22, 2022

பிவிபி தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி. ஜி, ஆனந்தம், ரன், வாரியர் போன்ற பல திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்த நிலையில் செக் மோசடி வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. பிவிபி தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.