• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!!

Byமகா

Aug 22, 2022

மதுரையிலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகருக்கு சிறப்பு ரயில் ஆகஸ்ட் மாதம் வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செகந்தராபாத் – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (07191) செகந்திராபாத்தில் இருந்து ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 26 வரை திங்கட்கிழமைகளில் இரவு 09.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 08.45 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமார்க்கத்தில் மதுரை – செகந்தராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07192) மதுரையில் இருந்து ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 28 வரை புதன்கிழமைகளில் அதிகாலை 05.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.25 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 ரயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் தெரிகிறது.