• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ராஜீவ் காந்தி பிறந்தநாள்.. மரியாதை செலுத்திய ராகுல், பிரியங்கா..

Byகாயத்ரி

Aug 20, 2022

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது . இந்நிலையில் டெல்லியில் உள்ள வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ,காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்டோர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தொண்டர்களும் தங்கள் அஞ்சலியை செலுத்தினர். ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை ஒட்டி அவரது மகனும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் , அப்பா ஒவ்வொரு நொடியும் என்னுடன் என் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நாட்டிற்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்ற நான் எப்போதும் முயற்சிப்பேன் என்று பதிவிட்டு, வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ வந்து தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.