• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட “ஷியாம் சிங்கா ராய்”…

Byகாயத்ரி

Aug 19, 2022

தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் ராகுல் சங்கிருத்யன் இயக்கியுள்ள படம் ஷியாம் சிங்கா ராய். மறுபிறவி குறித்த சூப்பர் நேச்சுரல் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தனர்.

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட நான்கு தென்னிந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழு வெளியிட்டது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படதிதில் நானி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், இப்படம் அமெரிக்காவின் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைத்துள்ளனர். சிறந்த படம், பின்னணி இசை, கலாச்சார நடனம் ஆகிய பிரிவுகளில் ஷியாம் சிங்கா ராய் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆர்.ஆர்.ஆர் படத்தை ஆஸ்கருக்கு பரிந்துரைத்தால் விருதுகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இப்படம் பற்றி varity என்ற பிரபல இதழிலும் தகவல் வெளியாகியுள்ளது.