• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இரண்டு மாதங்களுக்கும் மேலாக மாற்றமே இல்லாத பெட்ரோல், டீசல் விலை..!

Byவிஷா

Aug 16, 2022

பெட்ரோல், டீசல் விலையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாகியும் எந்தவொரு மாற்றமும் இல்லாதது வாகன ஓட்டிகளை சற்றே நிம்மதிப் பெருமூச்சு அடைய வைத்திருக்கிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 86 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து 87-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இதனால், சென்னையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகனஓட்டிகளை சற்றே நிம்மதிப் பெருமூச்சு அடைய வைத்திருக்கிறது.