• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இந்திய பங்கு சந்தையின் தந்தை ராகேஷ்ஜுன்ஜுன்வாலா மறைவு

Byவிஷா

Aug 14, 2022

இந்திய பங்கு சந்தையின் தந்தை, என்றும், இந்தியாவின் ‘வாரன்பஃபட்’ என்றும் அழைக்கப்பட்டு வரும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தனது 62 வயதில் இன்று காலமானார்.
இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களில் மிகவும் பிரபலமானவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, டாடா குழுமம் உள்ளிட்ட பல பங்குகளில் தனது முதலீட்டினை பெருமளவில் செய்துள்ளார். இவர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விட்டால், அந்த நிறுவனத்தின் பங்குகள் பல மடங்கு உயரும் என கூறப்படுவதுண்டு.

இந்திய பங்குச் சந்தையின் தந்தை என்று பிரபலமாக அறியப்பட்ட அவருக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. ஆகாசா ஏர் நிறுவனத்தை சமீபத்தில் தொடங்கிய திரு. ஜுன்ஜுன்வாலா சில நாட்களுக்கு முன்பு அதன் தொடக்க விழாவில் தோன்றினார். அவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

திரு. ஜுன்ஜுன்வாலா பல இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்து கடந்த இரண்டு தசாப்தங்களில் பெரும் செல்வத்தை ஈட்டியிருந்தார். அவர் தனது முதலீட்டு திறன்களுக்காக இந்தியாவின் ‘வாரன்பஃபட்’ என்று அழைக்கப்பட்டார்.
பிரதமர் மோடி ட்விட்டரில் திரு.ஜுன்ஜுன்வாலாவுக்கு தனது அஞ்சலியை செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.