• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு

ByA.Tamilselvan

Aug 12, 2022
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில்அமைந்துள்ள அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொதிகை மலை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. பொதிகை மலையில் 121 வகை உயிரினங்கள், 157 வகை ஊர்வன விலங்குள் மற்றும் அறிய வகை தாவரங்களும் காணப்படுகிறது.

இந்நிலையில் உலக யானைகள் தினத்தையொட்டி சிறப்பு பெற்ற 1197 சதுர கி.மீ பரப்பளவு உள்ள அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 4 யானைகள் காப்பகம் உள்ள நிலையில் 5-வது காப்பகமாக அகஸ்தியர் மலையை அறிவித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.