• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரசு டாஸ்மாக் கடையை எதிர்த்து காரைக்குடி மக்கள் போராட்டம்

Byகுமார்

Sep 23, 2021

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியின் மையப்பகுதியான 100 அடி ரோடு திருவள்ளுவர் தெரு குடியிருப்பு பகுதியில் அரசு மதுபான கடை அமைக்க பணிகள் நடந்து வருகிறது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்க்கு வந்து போராட்டம் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்