• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Aug 6, 2022

ரவை மசாலா தோசை:

தேவையான பொருட்கள்:
ரவை – 150 கிராம் தயிர் – அரை கப் உருளைக்கிழங்கு 2 வெங்காயம் – 2 பச்சைமிளகாய் – 2 தக்காளி – 2 இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி சோம்பு – தாளிக்க கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும். ரவையில் தயிர் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக்கொள்ளவும். அதன்பின் அதனை மிக்ஸியில் போட்டு மாவு பதத்திற்கு அரைக்கவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இந்த மாவை உப்பு சேர்த்து கரைத்து 4 மணிநேரம் புளிக்க வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். அதன்பின் மசித்து வைத்துள்ள உப்பு, உருளைக்கிழங்கை அதில் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். பின்பு கொத்தமல்லி தூவி இறக்கி ஆற விடவும். இப்பொழுது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் செய்து வைத்த மசாலாவை தோசையின் நடுவில் வைத்து உருட்டி சதுரமாகவோ அல்லது நீளவாக்கிலோ மடித்து எண்ணெய் ஊற்றி திருப்பி போடவும். இப்பொழுது சூப்பரான ரவா மசாலா தோசை ரெடி.