கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. தொற்று குறைந்து வருவதையடுத்து, கடந்த 8ஆம் தேதி முதல், சாமி தரிசனத்திற்கு உள்ளூர் பக்தர்கள் 2,000 பேருக்கு இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், கடந்த 20ஆம் முதல் இலவச தரிசனத்திற்கான டோக்கன்களை 8,000ஆக உயர்த்தியது தேவஸ்தானம்.
தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் 300 ரூபாய் சிறப்பு தரிசன டோக்கன்களை போல, இலவச தரிசன டோக்கன்களையும் ஆன்லைனிலேயே வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது.
இதைப்பற்றி தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இனிமேல் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ்கள் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என அறிவித்துள்ளது. வரும் 25-ஆம் தேதி முதல் இலவச தரிசன டோக்கன்களை ஆன்லைனில் பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை ஏழுமலையானை இலவசமாக தரிசிக்கும் வகையில் டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.













; ?>)
; ?>)
; ?>)