• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

“குளுகுளு” ஒரு பார்வை..!

தமிழ் சினிமாவில் அரசியல் பகடி செய்யக்கூடிய படங்கள் வரும் இவற்றில் பெரும்பாலும் கதாநாயக பிம்பத்தை உயர்த்தி பிடிப்பதற்காகவே அரசியல் பகடியும், அரசியல் விமர்சனங்களும் இருக்கும். மக்கள் நலன் சார்ந்து அவர்கள் பிரச்சினையை படம் நெடுக பேசியிருக்கும் படம் தான் குளுகுளு.

தமிழ் சினிமாவில் காமெடியனாக பார்த்து ரசிக்கப்பட்டு வந்த நடிகர் சந்தானம் நடித்திருக்கும் டார்க் காமெடி படம் தான் குளுகுளு. நெற்றியைத் தாண்டி வளர்ந்த முடி, நீண்ட தாடி, அதற்கேற்ற ஆடை, உருவகேலியற்ற, ஆர்பாட்டமில்லாத ஒரு நடிப்பை கொடுத்த விதத்தில் நடிகர் சந்தானத்துக்கு அவரது திரையுலக வாழ்க்கையில்இது முக்கியமான படம். தனதுவழக்கத்திலிருந்து மொத்தமாக உருமாறி அழுத்தமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார் சந்தானம். படத்தில் அவர் சிரிக்கவில்லை, யாரையும் கலாய்க்கவில்லை ஆனால், பார்வையாளர்களை ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கும் விதத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ஜில் ஜங் ஜக்,சூது கவ்வும், டாக்டர், பாணியிலான தமிழின் அரிய டார்க் காமெடி வகையறா படமாக ‘குலுகுலு’வை இயக்கியிருக்கிறார் ‘மேயாத மான்’ புகழ் ரத்னகுமார்.

நகரமயமாதலின் பெயரால் அழிக்கப்பட்ட ஒரு பழங்குடி இனத்தில் கடைசி மனிதன். யாரென்று பாராமல் உதவும் கூகுள் தேடுபொறிபோல, உதவி என்று கேட்பவர்களுக்கு, உதவுகிறார் கூகுள் என அழைக்கப்படும் சந்தானம்இதனால், பல சிக்கல்களை எதிர்கொள்கிறார். ஐந்துபேர் கொண்ட நண்பர்கள் குழுவில் ஒருவன் கடத்தப்பட, அவனை மீட்க உதவுமாறு கூகுளை நாடுகின்றனர்.

உயிரை பணயம் வைக்கும் இந்த ஆபரேஷனில் கூகுள் பெறுவதும், இழப்பதும் என்ன என்பதுதான் கதை.