• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா… 4 பேருக்கு கொரோனா தொற்று….

Byகாயத்ரி

Jul 28, 2022

செஸ் ஒலிம்பியாட் விழாவில் பங்கேற்க இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று முதல் நடக்கவிருக்கிறது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு, உரையாற்றுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 14 நாட்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் நிலையில் 188 நாடுகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள், வீராங்கனைகள் பங்குப்பெற வருகை புரிந்துள்ளனர்.

தற்போது இவ்விழாவில் பங்கேற்க இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு விளையாட்டரங்களில் கலைநிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் செஸ் ஒலிம்பியாட் கலைக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கலைவிழாவில் பங்கேற்கும் 900 பேருக்கும் பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. தொற்று உறுதியானவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.