

கொரோனாபாதிப்பு கடந்த 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் 20,000 தாண்டியுள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 25-ந் தேதி 16,866, 26-ந் தேதி 14,830, நேற்று 18,313 ஆக இருந்த நிலையில் இன்று மீண்டும் 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 44 பேர் இறந்துள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,26,211 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,216 பேர் நலம்பெற்றனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 86 ஆயிரத்து 787 ஆக உயர்ந்தது. தற்போது 1,46,323 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 1,297 குறைவு ஆகும். நாடு முழுவதும் இதுவரை 203 கோடியே 21 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 40,69,241 டோஸ்கள் அடங்கும்.
இந்தியாவில் 3வது அலை வரவாய்பில்லை என்றாலும் கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்தபாடில்லை. எண்ணிக்கை குறைவதும் அதிகரிப்பதுமாக உள்ளது.
