• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

சைமா விழாவில் 7 விருதுகளை அள்ளிக் குவித்த ‘சூரரைப் போற்று

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருது வழங்கும் விழாவில் தற்போது நடைபெற்றுவருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் சைமா விருதுகள் வழங்கப்படவில்லை. இதனால், கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கும் சேர்த்து தற்போது விருது கொடுக்கப்படுகிறது.

இதில் கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ கமர்ஷியல் ரீதியாக மட்டுமில்லாமல் வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சூரியாவின் நடிப்புக்கு தீனிபோடும் வகையில் இந்த படம் அமைந்திருந்து.

சமீபத்தில், மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ’சூரரைப் போற்று’ சிறந்த படம், சிறந்த நடிகர் என இரண்டு விருதுகளைக் குவித்த நிலையில், தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் சைமா விருது விழாவில் 7 விருதுகளைக் குவித்துள்ளது.

சிறந்த நடிகர், சிறந்தப் படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த தயாரிப்பாளர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் என ஏழு விருதுகளை அள்ளியுள்ளது.

இதனை சந்தோசத்துடனும் பெருமையுடனும் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா பகிர்ந்து மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.